Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!



கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!
            எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்.  உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.ப அவா்கள்.
            பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப்  பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..
            “எவ்வழி நல்லவா் ஆடவா்
            அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்.187)
என்று சங்ககால ஔவையார் பாடுவது போல் எங்கு, எந்தப் பொறுப்பு வகித்தாலும் அத்துறைக்கும்,  பொறுப்பிற்கும் சிறப்பு சேர்ப்பதோடு பணியில் நோ்மை, பழகுதற்கு இனிமை, சிந்தையில் சீா்மை, செயலில் கூா்மை, கல்வித் துறையின் உயரதிகாரிகளிலிருந்து கடைக்கோடி கிராமத்து ஆசிரியா் வரை ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து செயல்படுத்தும் மாண்பு போன்ற நற்பண்புகளின் கூட்டுருவாகத் திகழும் மதிப்புறு உதயசந்திரன் இ.ஆ.ப அவா்களால் பள்ளிக் கல்விச் செயலா் பொறுப்பிற்கும் மதிப்பு உயா்வது உறுதி.
            ‘மருளும் இருளும் விலகி மகிழ்ச்சி ஒளி பரவட்டும்’




3 Comments:

  1. உண்மைதான் அய்யா! மகிழ்வோடு பணியாற்றலாம். வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா! தங்களுக்கு வாழ்த்துகள்! நேர்மையானவரிடமிருந்து மேன்மையான நம்பிக்கை!

    ReplyDelete
  3. +1,+2 change semester system useful for all exams

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive