தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் குறைத்து காட்டப்பட்டதாக
மாணவர்கள் குற்றம் சாட்டியதால் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான
கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.
பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களுக்கான
கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு
மருத்துவமனையில் இன்று பிற்பகல் 3 மணிக்குதொடங்கி மாலை 6 வரை நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கலந்தாய்வில் பங்கேற்குமாறு 600-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.கலந்தாய்வு தொடங்கியதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பட்ட மேற்படிப்பு இடங்கள் குறைத்து காட்டப்பட்டுள்ளதாக மாணவர்களும், பெற்றோரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. அரசிடமும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்திடமும்கலந்தாலோசித்த பிறகு கலந்தாய்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

Thiruttu pasanga. ..kuraithu kaamithu appurama management la kuduthuttu kaasu vaanga paarkirangala
ReplyDelete