'ஒரு மாணவனுக்கு, ஒரு மரம் என்ற திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்,'' என, கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தினார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், மூன்று நாட்கள் நடந்த, 121வது மலர் கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது. விழாவில், கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது: ஊட்டியில் பல வண்ண மலர்கள், சுற்றுலா பயணியரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. பழமையான தாவரங்களை பாதுகாப்பதில், இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, வேகமாக பெருகி வரும் தொழிற்சாலைகள் மற்றும் நகரமயமாதல் காரணமாக, புவி வெப்ப மயமாகி, கால நிலை மாறுபட்டு வருகிறது. நம் நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்க, 'ஒரு மாணவனுக்கு ஒரு மரம்' என்ற திட்டத்தை, முனைப்புடன் மேற்கொள்ள, மாணவர்கள் முன்வர வேண்டும்.
சென்னை, ஊட்டி ராஜ் பவன்களில், அரிய வகை மரம், செடி, கொடிகள் தொடர்பான தொகுப்பு, புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அதை, மக்கள் வாங்கி, நல்ல முறையில் பயன்படுத்தி, இயற்கையை பாதுகாக்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...