80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு எல்லைப்புற மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் அசாம் மக்களுக்கு முழுமையாக பொருந்தாது.
மேலும் நாட்டின் பிற பகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவானத்து ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
அத்துடன் இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...