பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள்,
100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன. வழக்கம் போல, இந்த
ஆண்டும், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
மார்ச்சில் நடந்த, ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிக் கல்வித் துறையின்
நேரடி கட்டுப் பாட்டில் உள்ள, 5,463 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 4.03 லட்சம்
மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 3.69 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்
ளனர். அதிலும், 1,557 அரசு பள்ளிகளில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும்,
தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஆண்டுகளை
ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுதேர்வில், 100 சதவீதம்
தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளிகள் எண் ணிக்கையும் உயர்ந்துள் ளது.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக, விருது நகர் மாவட்டத் தில், 104 பள்ளிகள், 100
சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
100 சதவீதம்:தலா, 83 பள்ளிகளுடன், ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டம்
இரண்டாம் இடத்தை யும்;கன்னியாகுமரி, 91 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும்
பிடித்துள்ளன. சென் னையில், மூன்று பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி
பெற்றுள்ளன.
அரசு பள்ளி மாணவர் களின் ஒட்டு மொத்த
தேர்ச்சியில், மாவட்ட அளவில், 97.79 சதவீதத் துடன், கன்னியாகுமரி முதல்
இடத்தையும்; 97.69 சதவீதத்துடன், விருதுநகர் இரண்டாம் இடம்; 97.61
சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள் ளன. 28 அரசு
பள்ளிகள் உடைய சென்னை மாவட்டம், 91.41 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
கூடுதல் தேர்ச்சி: பத்தாம் வகுப்பு பொது தேர்வில், ஒவ்வொரு ஆண்டும்,
மாணவர்களை விட, மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதேபோல,
இந்த ஆண்டும், மாணவர்களை விட, மாணவியரே, ௩.௭ சதவீதம் கூடுதலாக தேர்ச்சி
பெற்றுள்ள னர். தேர்வு எழுதிய மொத்த மாணவியரில், 96.2 சதவீதம் பேர்
தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் தேவை
பாடத்திட்டங்களை மாற்றாமல், மெருகூட்டும் பயிற்சிகள் இல்லாமல், அரசு பள்ளி
மாணவர் கள், இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளனர். எனவே, தனியார் பள்ளிகளுக்கு
நிகராக, மாண வர் சேர்க்கையை உயர்த்தவும், ஆங்கில மொழி திறன், போட்டித்
தேர்வுகளில் பங்கேற் கும் ஆற்றலை வளர்க்கவும், அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
பதவி மற்றும் சம்பள உயர்வில் மட்டுமின்றி, மாணவர்கள் முன்னேற்றத்திலும்,
அக்கறை காட்டும் ஆசிரியர்களை அதிக அளவில் உரு வாக்க வேண்டும். இதற்கு,
தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுத்தால், இன்னும் முன்னேற் றம் கிடைக்கும்
என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...