Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அக்னி நட்சத்திரம் 4-ந் தேதி தொடங்குகிறது

        தமிழகத்தில் தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது. இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் ‘கத்திரி வெயில்’ வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிகிறது. இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும். அனல் காற்று வீசும்.


இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது. அக்னி நட்சத்திர நாட்களில் அனல் காற்று அதிகமாக வீசும். மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து அனல்காற்று வீசத்தொடங்கும். இப்போது உள்ள நிலவரப்படி, கடல் பகுதி, நிலப்பகுதிகளில் இருந்து காற்று அதிக அளவில் வீசுகிறது. இன்னும் 2 நாட்களில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive