பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., -
பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும் கவுன்சிலிங்கிற்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் மாணவர்கள்
சேர்க்கைக்கு, அண்ணா பல்கலை மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. வரும்
கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று
துவங்கியது. முதல் நாளான நேற்று, மாலை, 6:00 மணி நிலவரப்படி, 4,738
மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
அவர்களில், ௪௮ பேர் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, ஆன்லைன் பதிவு மையம்
மூலமாக விண்ணப்பித்து உள்ளனர்.மே, 31 வரை விண்ணப்பிக்க அவகாசம்
வழங்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பிரதியை, ஜூன்,
3க்குள், அண்ணா பல்கலையில், தபாலிலோ, நேரிலோ
சமர்ப்பிக்கலாம். விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் சேர விரும்புவோர், உரிய
ஆவணங்களுடன், அண்ணா பல்கலைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க
வேண்டும்.'பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்புவோருக்கு விண்ணப்பிக்கும்
தேதி, தனியாக அறிவிக்கப்படும்' என, இன்ஜி., கவுன்சிலிங் மாணவ சேர்க்கை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...