பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட, 'ரேங்கிங்' முறையில், மாற்றம்
வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்
தேர்வில், அதிக மதிப்பெண் பெறும், முதல் மூன்று மாணவர்கள், மாநில மற்றும்
மாவட்ட வாரியாக, தர வரிசை பட்டியலில் இடம் பெறுவர்.
அவர்களுக்கு, அரசு சார்பில், பரிசு, சான்றிதழ், ஊக்கத்
தொகை வழங்கப்படும்; தனியார் அமைப்புகளும், பாராட்டி பரிசு
வழங்கும்.தற்போது, தனியார் பள்ளி, அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்
சேர்த்து, ஒரே பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பெரும்பாலும், தனியார்
பள்ளிமாணவர்களே முன்னிலை பெறுகின்றனர். அரசு மற்றும் தமிழ் வழி மாணவர்களை
ஊக்குவிக்கும் வகையில், பொதுத் தேர்வு, 'ரேங்கிங்' முறையை மாற்ற, பள்ளிக்
கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இந்த ஆண்டு, பொதுத் தேர்வு முடிவை
வெளியிடும் போது, 'ரேங்கிங்' முறையில், மாற்றம் கொண்டு வர,அதிகாரிகள்
ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதாவது, ஆங்கில வழியில் படிக்கும், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களை, தனியாக தர வரிசைப்படுத்தவும், தமிழ் வழியிலும், அரசு பள்ளியிலும் படித்த மாணவர்களை, மாநில, 'ரேங்கிங்'கில் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளனர். தேர்வு முடிவு, மே, 12ல் வெளியாகும் போது, இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 'ரேங்கிங்' முறை மாற்றத்தால், அரசுபள்ளியில் படித்து, அதிக மதிப்பெண் எடுக்கும், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் பரிசு, பதக்கங்களை பெற முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

All UG PG B.Ed,M.Ed B.E ME join SC and ST Free other fees contact sivanathan 9942799762
ReplyDelete