திருச்சி:பிளஸ் 2 தேர்வில், குழந்தை
தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட மாணவர், பார்வையற்ற மூன்று மாணவியர், ஆயுள்
கைதிகள் மூவர், 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துஉள்ளனர்.
திருச்சி மத்திய சிறை கைதிகளில், 15 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொலை வழக்குகளில் சிக்கி, ஆயுள் தண்டனை பெற்றுள்ள, செந்தில்குமார், 31, - 1,052 சாமிநாதன், 37, - 1,038, யோகநாதன், 29, - 1,022, கைதி டேனியல்ராஜ் - 1,019 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துஉள்ளனர்.
மூன்று ஆயுள் கைதிகளும், இளங்கலை பட்டப்படிப்பு படிக்க, விருப்பம் தெரிவித்துஉள்ளனர்.
குழந்தை தொழிலாளர்திருச்சியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்ட, 23 குழந்தை தொழிலாளர்கள், உரிய பராமரிப்புக்கு பின், வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 23 பேரும், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், 2007ல், கொத்தனார் தொழிலில் ஈடுபட்டு, மீட்கப்பட்ட ராம்பிரபு என்ற மாணவர், தெப்பக்குளம் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்து, 1,059 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பார்வையற்ற மாணவி:
திருச்சி, புத்துாரில், பெண்களுக்கான பார்வை குறைபாடு உடையோர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்த, 25 மாணவியர், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்று, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதில், சாந்தரூபினி - 1,070, இலக்கியா - 1,032, ராதிகா - 1,009 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துஉள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...