'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில்
சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும்
அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை,
கல்லுாரிகளுக்கு, இயக்குனர், மஞ்சுளா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இட
ஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் மதிப்பெண்
அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்க
வேண்டும்இளநிலை பட்டப்படிப்பில், மாணவர்களை சேர்க்க, 21 வயது அதிகபட்ச வயது
நிர்ணயிக்கப் படுகிறது. பொது பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு,
மூன்றாண்டுகள் வரை கூடுதல் சலுகை உண்டு. அதன்படி, 24 வயது வரையுள்ளோரை,
கல்லுாரிகளில் நேரடி பட்டப்படிப்புக்கு சேர்க்கலாம்மாற்று திறனாளிகளுக்கு,
ஐந்து ஆண்டு சலுகை வழங்கி, 26 வயது வரை, மாணவர்களை சேர்க்கலாம்.
இதில், எந்த விதி மீறலும் இருக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதில், எந்த விதி மீறலும் இருக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...