கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளி சேர்க்கைக்காக இதுவரை 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிகழ் கல்வியாண்டில் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை (மே 9) வரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இணைய வழியில் விண்ணப்பங்கள் வரும் 18-ஆம் தேதி வரை மட்டுமே பெறப்படும்.
விண்ணப்பிப்பதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.
முதன்மைக் கல்வி அலுவலர்-மாவட்டக் கல்வி அலுவலர்-மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்- மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்-உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்-வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு இணைய சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தை போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
இந்த வசதி வரும் 18-ஆம் தேதி வரை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...