பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,
பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத்
தெரிவித்தார். மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்
வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'தமிழகத்தில், அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும்
பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, பத்தாம்
வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிவரும்
நிலையில், அடுத்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு
எழுதுவார்கள்.
அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு
முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி
ரேங்க்கிங் முறை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி
இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற
மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இந்நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு
நடத்தப்படும் என்னும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் செங்கோட்டையன்!
Super correct decision
ReplyDeleteபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டு 11ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தலாம்.தொடர்ந்து 3ஆண்டுகள் பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மனச்சுமையைத்தரும்.
ReplyDelete11மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குமட்டும் பொதுத்தேர்வு நடத்தலாம் 10ஆம் வகுப்புக்கு வேண்டாம்.தொடர்து 3 ஆண்டுகள் பொதுத் தேர்வு மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்,
ReplyDeleteGood one. கல்வித்துறையில் எதிர்ப்பார்த்த மாற்றங்கள்.
ReplyDelete