16.05.2017 தொடக்கக்கல்வி இயக்குநரகத்தில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் !!
இன்று 16.05.2017 தொடக்கக்கல்வி இயக்குநரகத்தில் மாணவர் சேர்க்கை
அதிகப்படுத்த எடுக்கப்பட வேண்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
SSTA சார்பாக மாநில துணைத்தலைவர் திரு.த.ஞானசேகரன் மற்றும்
திருவள்ளுவர்,மாவட்டச்செயலாளர் திரு.ராஜேஷ்,& செந்தில் குமார் ஆகியோர்
எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.
1. அரசு
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்டங்களில் விழிப்புணர்வு
பிரச்சாரம் நடத்த முடிவு. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க
பிரதிநிதிகளையும் ஈடுபடுத்த முடிவு.சினிமாத்துறையில் பிரபலமான
நடிகர்களையும் பயன்படுத்த அரசு முடிவு. 2. தொடக்க ,
நடுநிலைப்பள்ளிகளில் பதிவுத்தாள் (Record sheet) பதில்
மாற்றுச்சான்றிதழ்(TC) வழங்கப்படும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு
வழங்கப்படுவதை போல் வழங்கப்படும் ( ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு). 3.
வரும் ஆண்டுமுதல் ஆசிரியர்களுக்கான பள்ளி வேலை நாட்களில் நடைபெறாது.மேலும்
பயிற்சிகள் சிறப்பான திட்டமிடலுடன் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட
பயிற்சிகள் மீண்டும் மீண்டும் வழங்கப்படதாது.
4. SSTA வின் 1 1/2 ஆண்டுகளாக கோரிக்பையான அரசுப்பள்ளி
மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களின் சீருடை போன்று மூன்று செட் வேறு வேறு
வண்ணங்களில் விரைவில் வழங்கப்படும். மேலும் விபரங்கள்
விரைவில்
Thank u fr u r Post
ReplyDelete