திருச்சி அருகே, வாலாடி - பொன்மலை இடையே,
இரண்டாவது புதிய அகல ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், வரும்,
23ல், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட, 15 ரயில்களின் போக்குவரத்தில்
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
● சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ், இரு வழி மார்க்கத்திலும், விருத்தாசலத்தில் இருந்து மாற்று பாதையில், விருத்தாசலம், சேலம், கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது
● மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ், தஞ்சை வழியாக இயக்கப்படுவதால், 1 மணி, 25 நிமிடங்கள் தாமதமாக, விழுப்புரம் வந்தடையும்
● சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து காலை, 8:30 மணிக்கு பதிலாக, காலை, 10:30 மணிக்கு இயக்கப்படும்
● திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ், திருச்சியில் இருந்து, மாலை, 4:00 மணிக்கு பதிலாக, இரவு, 7:00 மணிக்கு இயக்கப்படும்
● சென்னை எழும்பூர் - மதுரை, வைகை எக்ஸ்பிரஸ், ஸ்ரீரங்கத்தில், 30 நிமிடங்கள் வரை தாமதமாகும்.
பாசஞ்சர் ரயில்கள்
● திருச்சி - லால்குடி, மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்கள்ரத்து செய்யப்பட்டு உள்ளன
● மயிலாடுதுறை - திருச்சி பாசஞ்சர் ரயில், திருவரம்பூர் வரையும்; கடலுார் துறைமுகம் - திருச்சி பாசஞ்சர் ரயில், லால்குடி வரையும் இயக்கப்படும்
● விருத்தாசலம் - திருச்சி பாசஞ்சர் ரயில் ஸ்ரீரங்கம் வரையும்; மன்னார்குடி - திருச்சி மற்றும் நாகூர் - திருச்சி பாசஞ்சர் ரயில், திருவரம்பூர் வரையும் இயக்கப்படும்
● காரைக்கால் - திருச்சி பாசஞ்சர் ரயில், காரைக்காலில் இருந்து, மதியம், 12:15 மணிக்கு பதிலாக, பிற்பகல், 2:15 மணிக்கு இயக்கப்படும்
● திருச்சியில் இருந்து, மன்னார்குடிக்கு மாலை, 5:30 மணிக்கு இயக்கப்பட வேண்டிய பாசஞ்சர் ரயில், நேரம் மாற்றப்பட்டு, சிறப்பு ரயிலாக, இரவு, 9:15 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...