போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்ததையடுத்து சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பல கட்ட
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போக்குவரத்து துறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று இறுதிக்கட்ட
பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், அகவிலைப்படி
நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதிய பலன்கனை வழங்க ஆயிரத்து 250 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ஓப்புதல் அளித்தார். ஆனால், இந்த தொகை போதுமானது
அல்ல என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்த்து நாளை முதல் திட்டமிட்டப்படி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து ஒய்வு பெற்ற தொழிலாளர்களைக் கொண்டு அரசு பேருந்துகளை முழுமையாக இயக்கவும், தனியார் பேருந்துகளையும் முழுமையாக இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்துகள் மீது கல் வீசுவதோ, வேறு ஏதாவது அசம்பாவிசத செயல்களில் ஈடுபட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சட்டம் ஓழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்வோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
இதேபோன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் நிறுத்தி விட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...