போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடனான பேச்சுவார்த்தை
திருப்தி அளிக்காததால் திட்டமிட்டபடி மே 15ஆம் தேதி தமிழகத்தில் வேலை
நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கம்
அறிவித்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரண்டு முறை நடைபெற்றும் தோல்வியடைந்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால் வேலை நிறுத்தப் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும் என சி.ஐ.டி.யு தொழிற்சங்க தலைவர் சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சவுந்தர்ராஜன், 'போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்த 500 கோடி தொகை போதாது. தமிழகத்துக்கு 6,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும். இருக்கும் 22,000 பேருந்துகளில் 17,000 பேருந்துகள் இயக்க தகுதியற்றவை' எனக் கூறியுள்ளார்.
மேலும், மே 15ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட எந்த வாய்ப்பும் இல்லை' என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...