பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பணிபுரிய தற்காலிக ஆசிரியப் பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் நிரப்பப் பட்டன. அந்த ஆசிரியர்களுக்கு முதலில் நிர்ணயிக்கப் பட்ட சம்பளத் தொகை ரூ.5000 அது பின்னர் 2007 ஆம் ஆண்டில் ரூ.7000 உயர்த்தப் பட்டது.|கணினிகல்வி|தற்போது இப்படி தற்காலிகமாக நியமிக்கப் பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்குரிய வகையில் சம்பள உயர்வு, பணியிட மாற்றம், பணிச்சேவை ஊக்கத் தொகைகள் முதலியவற்றைப் பெற்றுத் தரும் வகையில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு 2014 ம் ஆண்டு அளிக்கப்பட்டது
ReplyDeleteமாண்புமிகு கல்வி துறை அமைச்சர் உத்தரவால் ஐந்து ஆண்டுகள் கழித்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.ஆனால் ஒரு சில மாவட்டங்களில் பணி மாறுதல் பெற்றும் பல முதுகலை ஆசிரியர் மாறுதல் பெற்ற பள்ளிகளிலிருந்து விடுவிக்க படாமல் உள்ளனர்.இது அவர்களுது குழந்தைகளை பள்ளியில் சேர்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.இதில் அமைச்சர் தலையிட்டு ஆவணம் செய்ய தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
ReplyDelete