திருச்சிராப்பள்ளி மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது என்று
கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கால்நடை பாராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை
இயக்குநர் அலுவலகம், டாப்கோ வளாகம், புதுக்கோட்டை மெயின்ரோடு, கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-23 என்ற முகவரியில் வரும் 10.05.2017 முதல் 17.05.2017 வரை தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், பின்னர் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறவுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை கடிதம் தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பாணை கடிதத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தேர்வு செய்யப்பட்டு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியியல் பல்கலைகழகம் மூலமாக கால்நடை பராமரிப்ப பயிற்சி பெற்றிருப்பின் அசல் பயிற்சி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை அதற்குரிய இணையதளத்திலிருந்து 06.05.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் நேர்முக அழைப்பாணைகளை 08.05.2017 மற்றும் 09.05.2017 ஆகிய நாட்களில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Thanjavur yeappa sir callfor panuvaga
ReplyDelete