ஐ.சி.எஸ்.இ., என்ற இந்திய இடைநிலை சான்றிதழ் படிப்பில், 10ம்
வகுப்பு தேர்வு முடிவு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2,015 பள்ளிகள், நாடு முழுவதும்
செயல்படுகின்றன. இந்த ஆண்டு, 2.50 லட்சம் பேர், பொதுத் தேர்வை எழுதினர்.
அவர்களில், 74 ஆயிரத்து, 544 பேர், 10ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவை, www.cisce.org என்ற இணையதளத்தில்
தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...