ஏர்டெல் நிறுவனம் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
'எக்ஸ்குளுசீவ் வெப் ஆஃபர்' (Exclusive Web Offer) எனும் சலுகையின் கீழ் வழங்கப்படும் இலவச டேட்டா, முதற்கட்டமாக டெல்லி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. எனினும் மற்ற பகுதிகளில் வழங்கப்படுவது குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்து, பயன்படுத்தி வரும் திட்டங்களுக்கு ஏற்ப 750 ஜிபி முதல் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இதற்கான வேலிடிட்டி ஒரு ஆண்டு என்றும் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகளில் அதிகம் விற்பனையாகும் ஐந்து திட்டங்கள், ரூ.899 முதல் துவங்குகிறது. இவை அனைத்திலும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் வழங்கப்படுகின்றன. பிராட்பேண்ட் பேஸ் திட்டத்தில் 60 ஜிபி டேட்டா, 16 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் டேட்டா 750 ஜிபி ஆகும்.
மற்ற திட்டங்களில் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரூ.1,099 திட்டத்தில் 40 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதில் வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏர்டெல் ரூ.1,299 திட்டத்தில் 100 Mbps வேகத்தில் 125 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ,1,499 மற்றும் ரூ.1,799 திட்டங்களில் 100 Mbps வேகத்தில் முறையே 160 ஜிபி மற்றும் 220 ஜிபி வழங்கப்படுகிறது.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 65 ஜிபி / 100 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படும், இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்திற்கான டேட்டா தீர்ந்ததும், இலவச டேட்டா வழங்கப்படும், இதன் டவுன்லோடு வேகம் 512 Kbps வழங்கப்படுகிறது. போனஸ் டேட்டா பயன்படுத்தாத பட்சத்தில் அவை அடுத்த மாதத்திற்கு நீட்டிக்கப்பட மாட்டாது.
ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சலுகைக்கான சோதனைகள் துவங்கியுள்ள நிலையில், ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான போனஸ் டேட்டா சலுகை அரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வி-ஃபைபர் (V-Fiber) பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவித்தது. ஏர்டெல் வி-ஃபைபர் திட்டத்தில் பிராட்பேண்ட் வேகம் 100 Mbps வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...