மேஷம்
நண்பர்கள்
ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்
வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வர வேண்டிய
பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால்
போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
ரிஷபம்
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக
இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி
வருவார். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற
நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
மிதுனம்
குடும்பத்தாரின்
ஆதரவுப் பெருகும்-. அழகு, இளமைக் கூடும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய
சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். புது நட்பு மலரும். விலை உயர்ந்தப்
பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி
வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
கடகம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தினரிடம் கோபத்தை
காட்டாதீர்கள். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது
நல்லது. யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் உங்களைப்
பற்றி வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
சிம்மம்
கணவன்-மனைவிக்குள்
அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானம் என மனம் செல்லும். உறவினர்கள்
சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். லேசாக தலை வலி, வயிற்று வலி வந்து
நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கன்னி
இங்கிதமான
பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைக்
கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சில
வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நம்பிக்கைக்குறியவர்களை
ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனப்
பழுதை சரி செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள்
கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள்
ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
தனுசு
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை,
தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில்
சிக்கிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் கூடுதல்
கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மகரம்
பிள்ளைகளால்
மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை
வெற்றியடையும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். தாயாரின் உடல்
நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கும்பம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பர். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை
கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை
வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
மீனம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். வீட்டை
அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை கூடும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...