மேஷம்
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ரிஷபம்
உங்கள்
அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து
செயல்படுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதுப் பொருள்
சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மிதுனம்
காலை
10.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதானால் வீண் டென்ஷன் வந்து போகும்.
பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.
வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
காலை
10.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம்
அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய்
முடியும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில்
பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள்
தாமதமாக கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
சிம்மம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள்
கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை
சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில்
மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கன்னி
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல
தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி
செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில்
உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
துலாம்
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து
யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி
உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
விருச்சிகம்
நட்பு
வட்டம் விரியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டு. ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில்
சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
தனுசு
கம்பீரமாக
பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு
பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
மகரம்
காலை
10.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப்பட
வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்& மனைவிக்குள் இருந்த பிணக்குகள்
நீங்கும். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
கும்பம்
காலை
10.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக
பேசுவீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும்.
அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்
பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில்
யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
மீனம்
திட்டமிட்ட
காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப்
போங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.
வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசப்பாருங்கள். உத்யோகத்தில்
சோர்வு வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...