மேஷம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை
சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ரிஷபம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரி உதவுவார்.
வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு
அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மிதுனம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும்.
உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் மீது சிலர்
வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
கடகம்
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக்
கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
சிம்மம்
கனிவான
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில்
செல்வாக்குக் கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மனதிற்கு இதமான
செய்திகள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கன்னி
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில்
நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்
பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
நிர்வாகத்திறமை கூடும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
துலாம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப்
போகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். விசேஷங்களை முன்னின்று
நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
விருச்சிகம்
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
தனுசு
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள்
மதிப்பார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில்
தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
மகரம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.
திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். வாகனத்தை
இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி
வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கும்பம்
குடும்பத்தினருடன்
வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல்
அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில்
புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள்
வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
மீனம்
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வரும்-. நெருங்கியவர்களை
சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில்
புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...