மேஷம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ரிஷபம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம்
வந்து நீங்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராடி வேண்டி இருக்கும். உதவி
கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மிதுனம்
பிள்ளைகளின்
போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
கடகம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்
படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
சிம்மம்
குடும்ப
வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக
செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில்
பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கன்னி
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும்.
வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அலுவலகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
துலாம்
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்கத்தாலும்,
அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு
ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
விருச்சிகம்
குடும்பத்தில்
கலகலப்பான சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
உறவினர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
தனுசு
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையலால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து
நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள்.
பூராடம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். முன்கோபத்தால் பகை
உண்டாகும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மகரம்
குடும்பத்தில்
சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல்
உண்டு. அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன்
மோதல்கள் வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கும்பம்
பழைய
நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள்
மதிப்பார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
மீனம்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள்,
நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று
வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்
மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...