மேஷம்
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள்.
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ரிஷபம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.
குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில்
போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
மிதுனம்
பிள்ளைகள்
நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்த
ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது நட்பு மலரும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக
ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
கடகம்
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்
வெற்றி பெறுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க
நேரிடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில்
அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
சிம்மம்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று
நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை
கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களர் தேடி வருவார்கள்.
அலுவலகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கன்னி
எதிர்ப்புகளையும்
தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப்
பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்
அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
துலாம்
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள் மதிப்பார்கள். பூர்வீக
சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின்
நட்பு கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.
உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த
இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில்
சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு
அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
தனுசு
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும்.
சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய்
பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட
வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
மகரம்
எதையும்
திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக்
கொள்ளுங்கள். பேச்சில் காரம் வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில்
மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கும்பம்
எதிலும்
வெற்றி பெறுவீர்கள்-. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
மீனம்
சாதிக்க
வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். சிலர்
உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி
மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...