மேஷம்
மாலை
3.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று
முடிப்பது நல்லது. பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலர் உதவுவதை
போல் உபத்திரவம் தருவார்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். ஆடை, ஆபரணம் சேரும். தாய்வழி
உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாலை 3.15 மணி முதல் சந்திராஷ்டமம்
தொடங்குவதால் போராடி வெல்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மிதுனம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை
அதிகரிக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை
கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
கடகம்
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்
கூடும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம்
உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
சிம்மம்
எதிர்ப்புகள்
அடங்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி
வருவார். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படக்கூடும். கலைப் பொருட்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கன்னி
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.
சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து
மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால்
லாபமடைவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
துலாம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள்
வாங்குவீர்கள். வர வேண்டி பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள்
கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை
வாங்குவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
விருச்சிகம்
மாலை
3.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வேகத்தில்
முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். திடீர்
பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம்
தாமதமாக வரும். மாலைப் பொழுதிலிருந்து குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
தனுசு
குடும்பத்தில்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள்
கரையும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.
வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மாலை 3.15 மணி
முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மகரம்
குடும்பத்தினருடன்
மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விருந்தினர்களின்
வருகையால் வீடு களைக்கட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது ஏஜென்சி
எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கும்பம்
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர்
உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகாரப் பதவியில்
இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்
ஈட்டுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
உங்கள்
போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். புது வாகனம்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...