மேஷம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.
அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களை நீங்களே குறைத்து
மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும்.
உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.
வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம்
விட்டு பேசுவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
எதிர்பாராத
பணவரவு உண்டு-. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால்
அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில்
அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக்
கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
குடும்ப
வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்கள்
ஒத்துழைப்பார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக்
கொள்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய
வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
பழைய
நல்ல அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன்
கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்
போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வியாபாரத்தில் லாபம் வரும்.
உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில்
அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு
பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
குடும்பத்தில்
அமைதி நிலவும். அழகு, இளமைக் கூடும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். விலை
உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது
வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும்.
உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில்
அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
சின்ன
சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பணப்பற்றாக்குறையால்
பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். நண்பர் ஒருவர் உங்களை
உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். வியாபாரத்தில் போட்டிகளையும்
தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மகரம்
ஆன்மிகப்
பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன்
பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது
சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள்.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள்
ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில்
வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக்
கூடும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சில வேலைகளை
விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...