மேஷம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
ரிஷபம்
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். உறவினர்களின்
அன்புத்தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது
வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மிதுனம்
நட்பு
வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய
பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புதுப் பொருள் சேரும். யோகா, தியானம் என
மனம் செல்லும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக
ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
கடகம்
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள்
பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின்
திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
சிம்மம்
குடும்பத்தாரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்
தருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள்.
வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கன்னி
மாலை
4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள்
தாமதமாக முடியும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர்
உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில்
பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க
வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
துலாம்
கணவன்-மனைவிக்குள்
வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை
வாட்டும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களிடம்
கனிவாகப் பேசப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
மாலை 4.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி
முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
விருச்சிகம்
சொன்ன
சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்கள்
உதவியை நாடுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புகழ்
பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய
முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு
பேசுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அலுவலகத்தில் மரியாதைக்
கூடும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். சோர்வு, சலிப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள்
உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது
ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
மாலை
4.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள்
வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசியமாக
அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள்
அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
கணவன்-மனைவிக்குள்
ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின்
உதவியை நாடுவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில
தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை
மதிப்பார். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும்
நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...