*எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுதல் என்பது இழுக்கு*
வெற்றி பாதையில் :
* வலி நிறைந்த பாதையில் இறுதி பாகம் வந்தாயிற்று
* இனி செய்ய வேண்டியது மனதை தயார் செய்தல்
* முடியும் என்ற எண்ணம் மனதில் விதையுங்கள்
* முடியாது என்ற பயத்தின் களை செடியை தூக்கி எரியுங்கள்
* உங்களது வாழ்வையே புரட்டி போடும் அரசு வேலை தயார்
* இறுதி நிமிடங்களை பொறுமையாக தெளிவாக கடந்து வாருங்கள்
* தேர்வு கடினமோ எனிமையோ அந்த நிலை அனைவருக்கும் சமமானதே. அதை பற்றி கவலை வேண்டாம்
* ஒதுக்கி வைத்த பாடங்களை / பகுதிகளை இவ்வாரத்தில் படியுங்கள்
* உங்கள் நம்பிக்கை உடைக்கும் கருத்து கூறுவோரிடம் இருந்து விலகி இருங்கள்
* கடைசி வாரம் முழுமையாக திருப்புதலில் செலவிடுங்கள்
* மாதிரி முழுமை தேர்வு எழுதுவது நலம். அதன் மதிப்பெண் பார்த்து மனமுடைவது மடைமை
* மனமே எண்ணம் இயற்றும். எண்ணமே செயலாகும். செயலே வெற்றியாகும்
* சலிப்பு வேண்டாம். சோர்வு வேண்டாம்.
* புத்தகத்தை எடுக்கும் போதே உற்சாகமூட்டி தொடங்கவும்
* உடல் நலம் பேணுதல் தற்போதைய நாட்களில் அவசியம்
* படித்தது தான் என விட்டு விடாமல் ஒரு முறையாவது திருப்புதல் செய்யுங்கள்
* செல்போன், இணையம் நேர விழுங்கிகள். தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்
பயணம் வெற்றியோ தோல்வியோ முடிவு கையில் இல்லை. முடிவை முடிவு செய்யும் முயற்சி கையில் உள்ளது
வாழ்த்துகளுடன் பிரதீப்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...