எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.
ராமநாதபுரம், சேதுபதி நகரை சேர்ந்த டி.ராஜூ,
ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எம்ஜிஆர் மருத்துவ
பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட விபரப்படி, 2009 முதல் 2016 வரை அரசு
மருத்துவக் கல்லூரிகளில் 35,357 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், அரசுப்
பள்ளிகளில் படித்தவர்கள் 278 பேர் மட்டுமே. இது ஒரு சதவீதம் மட்டுமே. எனவே,
நீதிமன்றம் தலையிட்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையின்போது அரசு பள்ளியில்
படித்தவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என
கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம்,
என்.ஆதிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத்
தரப்பில், ‘மனுதாரர் குறிப்பிடும் பிரச்னை அரசின் கொள்கை முடிவு
தொடர்பானது’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘ஏற்கனவே தமிழ் வழியில்
படித்தவர்களுக்கு ேவலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. அந்த
அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டது. இதையடுத்து,
இந்த பிரச்னையில் அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறிய
நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...