Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Jio-வின் கோடைகால சலுகைகளின் சந்தேகங்களும் ... தீர்வுகளும்..!

இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ.

கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி ஜியோ இலவச சேவைகள் நேற்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக வருகின்ற 15-ஆம் தேதி வரை ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகலாம் என்றும் ரூ.99 (பிரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (ஏப்.15) அடுத்த 3 மாதங்களுக்கு அளவற்ற இணைய தள வசதி, அழைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோடைகால அதிரடி சலுகை (சம்மர் சர்ப்ரைஸ் ஆஃப்ர்) என்ற புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் வரும் 15-ம் தேதி வரை இலவச சலகைகளை பெறலாம். தற்போது அந்நிறுவனத்தில் 100 மில்லியன் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களில், 70 மில்லியன் பேர் ஜியோ பிரைம் திட்டத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில், கோடைகால அதிரடி சலுகையின் ஒரு பகுதியாக மேலும் 3 மாதங்களுக்கு இலவச சேவை தொடரும் என்று ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோவின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்களின் அந்த குழப்பத்திற்கான தெளிவுகள் கீழ்கண்டவாறு...

* ஜியோ கோடைகால சலுகைகள் என்ன?
ஜியோவின் கோடைகால சலுகைகள் மூலம் ஜியோ இலவச சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற வரும் 15-ம் தேதிக்குள் ரு.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி, பின்னர் ரூ.303 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்து கொண்டால் இந்த சலுகை 3 மாதத்திற்கு கிடைக்கும்.

* ஜியோ கோடைகால சலுகை பலன் என்ன?
- அளவற்ற இலவச அழைப்புகள்
- இலவச எஸ்எம்எஸ்
- பல அளவு கொண்ட டேட்டாக்களுடன் இலவச 4 ஜி இணைய சேவையை பெறலாம்.

* பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் கோடைகால சலுகை கிடைக்குமா?
ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் உறுப்பினராகி இணைந்துவிட்டால் உங்களது செல்பேசி எண் குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். அதன் பிறகு இணைப்பு துண்டிக்கப்படும்.  கோடைகால சலுகை பெற ரூ.303 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்வது அவசியம்.

* ரூ.303 செலுத்தினால் கோடைகால சலுகையின் பயன்கள் என்ன?
ரூ.303 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா வரும் ஜூன் 30-ம் தேதி வரை கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்திய ரூ.303 திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்பட்டிற்கு வரும். அது ஜூலை 8-ம் தேதி வரை செல்லுபடியாகும்.

* ரூ.149 திட்டம் தேர்வு செய்திருந்தால் கிடைக்கும் பலன் என்ன?
ரூ.149 செலுத்தி ரீசார்ஜ் செய்த வாடிக்காயாளர்களுக்கு கோடைகால சலுகைகள் கிடைக்காது. அவர்கள் மேற்கொண்டு ரூ.303 செலுத்தி ரீசார்ஜ்  செய்தால் கோடைகால சலுகைகள் கிடைக்கும். ஏற்கனவே, செலுத்திய ரூ.149 இருப்பில் வைக்கப்பட்டு  3 மாதங்கள் மற்றும் கூடுதலாக ஒரு மாதம் கழித்து, கோடைகால சலுகை முடிந்தவுடன் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ரூ.149 திட்டம் அமலுக்கு வரும்.

* கோடைகால சலுகை மூலம் ரூ.99 மற்றும் ரூ.499 திட்டங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
அளவற்ற இலவச அழைப்புகள், எஸ்எ  ம்எஸ் மற்றும் 2ஜிபி எப்யுபி அளவுடன் 4ஜி டேட்டா கிடைக்கும்.

* ரூ.4,999 அல்லது ரு.9,999 திட்டங்களை தேர்வு செய்திருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?
இந்த திட்டங்கள் அனைத்தும் 3 மாதங்கள் கழித்து அமலுக்கு வரும். அது வரை இலவச சேவையை தொடர்ந்து பெறலாம்.

* கோடைகால சலுகை பெற மொத்தம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
திட்டத்தின்  கட்டணமாக ரூ.99ம் சலுகை கட்டணமாக ரூ.303 என மொத்தம் ரூ.404 செலுத்த வேண்டும்.

* 100 ஜிபி திட்டம் சலுகைகள் விவரம் என்ன?
கோடைகால சலுகைகளின் கீழ் இந்த திட்டத்திற்கும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.999 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு கூடுதலாக 100 ஜிபி டேட்டா பெறலாம்.

இதன் மூலம் ஒருவர் ரூ.999 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் 100 ஜிபியுடன் கூடுதலாக 60 ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கும் 90 ஜிபி டேட்டா குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு கிடைக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive