Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

I "M" Possible - TET தன்னம்பிக்கை வரிகள் !!!

TET தன்னம்பிக்கை வரிகள் - பிரதீப் ப .ஆ . பூங்குளம்
🏆🏆🏆இன்றைய வெற்றி விதைகள்:🐝
* பல முறை தேர்வில் தோற்றவரா நீங்கள் - கவலை வேண்டாம் - அறிவும் சூழலும் முரண்பட்டது. இணையும் போது வெற்றி நிச்சயம்
 
* முதல் முறை தேர்வு எழுதுபவரா கவலை வேண்டாம். முதல் முயற்சி வலிமை மிக்கது

* வயது அதிகம் மறதி என்ற பயம் இருந்தால் அகற்றுங்கள். அனுபவமே கல்வியின் அடித்தளம் . மன நிலையை ஒருநிலை படுத்துங்கள். இளைஞரை விட பல மடங்கு திறன் பெற்றவர் ஆவிர்

* வழிகாட்டுதல் இல்லை என்ற நிலை இருப்பின் வருத்தம் வேண்டாம் சுயத்தை மீறிய திறன் மற்றவரிடம் இல்லை. நம்பிக்கை உடன் படியுங்கள்

* மறதி, சோர்வு , சலிப்பு வருகிறாதா? கண்டிப்பாக ஏற்படும். நம்பிக்கை விதையுங்கள் இவை களை செடியாய் மறைந்து விடும்

* படிக்கும் பகுதி அதிகம் என்ற பயம் உள்ளதா ? ஒரு எண்ணத்தை மனதில் விதையுங்கள் " I முதல் 10 வகுப்பு மாணவன் படிப்பதை நம்மால் எளிதாக படிக்க முடியும் என "

* போட்டியாளர் அதிகம் என பயமா? எவரை பற்றியும் கவலை வேண்டாம். ஓடும் குதிரையில் முதல் குதிரை நான் என கொள்ளுங்கள்

* நேரம் போதவில்லையா?
இருக்கும் நேர்த்தை மிக நேர்த்தியாக பயன்படுத்துங்கள்

* பணி இடம் இருக்குமா ? எவ்வளவு இருந்தாலும் கவலை இல்லை. 1 பணியிடமாவது கிடைக்கும் அது எனக்கு என முடிவு கொள்ளுங்கள்

* அட்டவணை படிக்க இயலவில்லையா ? கவலை வேண்டாம். நாம் இயந்திரம் அல்ல இட்டதை எட்ட. இயன்ற வரை போராடு

* பாடம் புரியவில்லையா ? வாழ்வியலுடன் தொடர்பு படுத்தி படியுங்கள்

* கணிதம் வரவில்லையா? புத்தக கணக்கை தீர்த்து பாருங்கள். தேர்ச்சி மதிப்பெண் நிச்சயம்

* கனவை நீக்குங்கள். நிஜத்தில் வாழுங்கள். இன்றைய முயற்சியே
நாளைய வெற்றி

* எண்ணம் தெளிவாகட்டும்
இலக்கு
உயர்வாகட்டும்

* நேர்மறை எண்ணம் நேர்மறை முடிவு தரும்.
எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்- விவேகானந்தர்

வாழ்த்துகளுடன் : தேன்கூடு🏆🐝




1 Comments:

  1. Very inspiring and motivating sir..thanks a lot sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive