மத்திய பல்கலையில் சேருவதற்கான, 'கியூசெட்'
நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், மத்திய பல்கலைகள்
செயல்படுகின்றன. தமிழகத்தில், தஞ்சாவூரில் மத்திய பல்கலை செயல்படுகிறது.
இந்த பல்கலையிலும், பல்கலையின் இணைப்பில், சென்னையில் உள்ள, 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' என்ற, சென்னை பொருளாதார கல்வியியல் நிறுவனத்தில் படிக்கவும், 'கியூசெட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச், 20ல் துவங்கியது. ஏப்ரல், 14ல் முடிவதாக இருந்தது; பின், வரும், 19 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...