யாரிடம் நன்கொடை பெறுவது, யாரிடம் உதவி கேட்பது இப்படி பலருக்கும் பலவித தயக்கம் இருக்கும்...
ஆனால் கடலூர் மாவட்டம் தங்களிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.ராஜலெட்சுமி அவர்கள் தனது
பள்ளியில் தனது *smart class* கனவு வகுப்பறைக்கு தனது சொந்தப்பணத்தில் ரூ
115000 செலவில் ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட முறையில் தனது பள்ளியில்
ஏற்படுத்தி ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளார்.
தனது தனிப்பட்ட செலவில் smart class வகுப்பறையை
ஏற்படுத்தியதைக் கேள்விப்ப்ட்ட நேர்மையின் சிகரம் திரு.சகாயம் IAS அவர்கள்
கடலூர் மாவட்டத்திற்கு வந்தபொழுது இந்தப்பள்ளிக்கும் வருகைபுரிந்து
பார்வையிட்டு பாராட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இது முடிவல்ல... எனது செயல்பாட்டின் தொடக்கம் என தன்னடக்கத்தோடு ஆசிரியை ராஜலெட்சுமி குறிப்பிட்டது சிறப்பிற்குரியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...