ஆந்திர
மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக அளவில் பிரசித்தி
பெற்றது. அதேபோல் அக்கோயில் வழங்கப்படும் பிரசாதமான லட்டும் ரொம்பவே
பிரபலம்.
பக்தர் ஒருவருக்கு இரண்டு லட்டு என்று கணக்கிட்டு தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு டிரேட் குறியீடு பெறப்பட்டுள்ளது.
தினமும் மில்லியன் கணக்கில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த லட்டுக்கு, தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
லட்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் லாரிகள் மூலமாகவே கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது லாரிகள் ஓடாததால், திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இப்போதைக்கு 3 நாட்களுக்கு தேவையான லட்டுகள் மட்டுமே கையிருப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மூலப்பொருட்கள் வரவில்லை என்றால், லட்டு தயாரிப்பு முற்றிலும் முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆக, லாரிகள் வேலை நிறுத்தம் 3 நாட்களுக்குள் முடிவுக்கு வரவில்லை என்றால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வெறும் கையோடு தான் திரும்ப வேண்டும் போலிருக்கிறது.
இருப்பினும், லாரிகள் தவிர்த்து ரயில்கள் உள்ளிட்ட மாற்று வழியில் மூலப் பொருட்களை கொண்டு வர தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...