அரசு இ - சேவை மையங்களில், புதிதாக ரேஷன் கார்டு பெறவும், ரேஷன் கார்டில் திருத்தம் செய்யவும், 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசு இ - சேவை மையங்கள் உள்ளன.இம்மையங்களில், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகளை, 24ம் தேதி முதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'மொபைல் ஆப்'பில் ஊழியர் விபரம் - உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது வினியோக திட்டத்துக்கு, 'tnepds' என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், ரேஷன் கடையில் பதிவு செய்த, மொபைல் போன் எண்ணை பதிவிட்டதும் செயல்பட துவங்கும். ரேஷன் ஊழியரின் பெயர், மொபைல் போன் எண், உணவுப் பொருட்கள் இருப்பு, கடை விடுமுறை உள்ளிட்ட விபரங்கள், மொபைல் ஆப்பில் இருக்கும். வேலை நேரத்தில் ஊழியர்கள் கடையை விட்டு, எங்கும் செல்லக் கூடாது; அவ்வாறு சென்றிருந்தால், மக்கள், மொபைல் ஆப்பில் உள்ள, போன் எண் மூலம் ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம். அது குறித்த புகாரையும், போன் மூலமே தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...