'யோகா
தினத்தை கொண்டாட, கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளில்
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு
உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா., சபையில் ஆற்றிய உரையின்படி, சர்வதேச
யோகா தினம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 2015 முதல், ஜூன், 21ல், சர்வதேச
யோகா தினம் கொண்டாடப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், ஜூன், 21ல், சர்வதேச
யோகா தினத்தை விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இது குறித்து, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஜூன், 21ல், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை, யோகா தியான நிகழ்ச்சி நடத்த வேண்டும். அத்துடன், யோகா தொடர்பான விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். இதற்காக, கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளிகள், கல்லுாரிகளில் மாணவர்களுக்கு, யோகா தின பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...