தாராபுரம், காங்கயம் தாலுகாக்களுக்கு வழங்க, தலா, 15 ஆயிரம் "ஸ்மார்ட்'
கார்டுகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தன. படிப்படியாக,
"ஸ்மார்ட்' கார்டு வழங்க, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 6.71 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், 6.48 லட்சம் கார்டுகள், ஆதார் பதிவு செய்து, "ஸ்மார்ட்' கார்டு பெற தகுதி பெற்றுள்ளன.மீதியுள்ள கார்டுகளில், ஆதார் பதிவு செய்யாதவர்கள், தங்களது விவரங்களை பதிந்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 93 சதவீத கார்டுகள், "ஸ்மார்ட்' கார்டாக மாறும் தகுதியை பெற்றுள்ளன.
தமிழக அரசு, ஐந்து வகையான "ஸ்மார்ட்' கார்டுகளை தயாரித்து வருகிறது. அவை, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு, வாகனம் மூலம், "ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
முதல் கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, இரண்டு தாலுகாக்களுக்கு மட்டும், 15 ஆயிரம் "ஸ்மார்ட்' கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.நேற்று மதியம், "ஸ்மார்ட்' கார்டுகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தன. இவற்றை, பொதுமக்களுக்கு வழங்கும் விழா நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
"வாட்ஸ் ஆப்'விழிப்புணர்வு
தமிழக அரசின் உணவு வழங்கல் துறை, "ஸ்மார்ட்' கார்டு மற்றும் பொதுவினியோக திட்ட சேவைகளை அறிந்து கொள்ளும் செயலி குறித்து, "வாட்ஸ் ஆப்' மூலம், நூதனமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து சினிமாவில் பாடி ஆடிய, "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' என்ற பாடல் மெட்டில் தயாரிக்கப்பட்ட ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.அதில், "ஸ்மார்ட் கார்டு வந்திடுச்சுங்க.. ஆதார் அதுல சேர்த்திடுங்க; மொபைல் எண்ணையும் சேர்த்திடுங்க...'' என்று, "டப்பிங்' பாடல் துவங்குகிறது.
"ஸ்மார்ட்' கார்டு குறித்தும், ஆதார் இணைப்பு குறித்தும் தெரிவித்து, பொதுவினியோக செயலி வாயிலாக, பொருள் இருப்பு, கடை திறப்பு போன்றவற்றை தெரிந்து கொள்வது குறித்தும் விளக்கப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...