ஆன்லைன் கல்வி திட்டத்தில், மருத்துவம் மற்றும் சட்ட பாடங்கள்
சேர்க்கப்படும்,'' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான,
ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.
'ஸ்வயம்' திட்டத்தில், தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில் பங்கேற்ற, அனில் சஹஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது:
சில கல்வி நிறுவனங்கள், 15 ஆண்டுகளாக பாடத்திட்டங்களை மாற்றிஅமைக்காமல் இருப்பது, மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு சவாலாக அமைகிறது. தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப, கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஏ.ஐ.சி.டி.இ., வரையறை செய்யும் பாடத்திட்டத்தை, 70 முதல், 80 சதவீதம் பயன்படுத்தி, மற்றதை, பல்கலைகளே நிர்ணயிக்கலாம். நாடு முழுவதும், 275 இன்ஜி., மற்றும் தொழில்
நுட்பக் கல்வி நிறுவனங்கள், தானாக முன்வந்து மூட விண்ணப்பங்கள் அளித்து உள்ளன.
'ஆன்லைன்' மூலம் கல்வி கற்பதற்காக, அமைக்கப்பட்ட, 'ஸ்வயம்' திட்டத்தில், 280 பொறியியல் பாடப்பிரிவுகள் மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளன.
மேலும், 350 பாடங்களுக்கான வரையறைகள் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மருத்துவம், சட்டம் என, பல்வேறு துறைகளில், 2,000 பாடங்கள், 'ஸ்வயம்'
திட்டத்தில் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...