ரூபாய் நோட்டில் எழுதியிருந்தால் வாங்க மாட்டோம் என்று மறுக்கக்கூடாது என வங்கிகளை, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’புதிய 500, 2000
ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தாலோ, கிறுக்கல்கள் இருந்தாலோ, அல்லது
நிறம் மங்கியிருந்தாலோ பல வங்கிகள் நோட்டுகளை பெற்றுக்கொள்ள மறுப்பதாக
பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
டிசம்பர் 31, 2013 தேதியிடப்பட்ட சுற்றறிக்கையில், பொதுமக்களோ, வங்கி
அலுவலர்களோ ரூபாய் நோட்டுகளில் எழுதக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தாலும்
கூட, தற்போது எழுதப்பட்ட, நிறம் குன்றிய, அழுக்கடைந்த நோட்டுகளை வாங்க
மறுக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மீறும் வங்கி அலுவலர்கள்
மற்றும் வங்கி கிளைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...