அரசின் சேவைகளை, பொதுமக்கள் விரைவில் பெற வசதியாக, இ -சேவை மையங்கள்
அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் சேவை பெற, மே, 2 முதல், மொபைல் போன்
எண் கட்டாயமாகிறது. முதல் முறையாக செல்வோர், தங்கள் மொபைல் போன் எண்ணை,
கம்ப்யூட்டர் பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்ய வேண்டும். அந்த
எண்ணிற்கு, சேவைக்கான விண்ணப்ப எண், சேவை கட்டணங்கள் குறித்த விபரங்கள்,
எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பப்படும்.
விண்ணப்பத்தின் நிலையை, 155250 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியும்,
சந்தேகங்கள் மற்றும் விபரங்களை, 1800 425 1333 என்ற, கட்டணமில்லா
தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பம் பரிசீலனை
செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும், பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு,
எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அதன் மூலம், இணையம் வழியாக, பொதுமக்கள்
தங்கள் சான்றிதழ்களை பார்வையிடலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...