கல்லூரிகளில் அரசு சார்பில் வழங்கப்படும்
கல்வி உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) பெற ஆதார் எண் வழங்கப்பட வேண்டும் என்று
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மானிய குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வகையான ஸ்காலர்ஷிப்களை பெற்று வருகின்றனர். தற்போது அதற்கான பதிவு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சமர்ப்பிக்க ஜூன் இறுதி
இந்நிலையில், ஸ்காலர்ஷிப் பெற ஆதார் எண்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆதார் எண் பெறாதோர், ஜூன் மாத
இறுதிக்குள், தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை, அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு பொருந்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த புதிய விதிமுறை, அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு பொருந்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...