பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் விலை ரூ.1.04 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலின் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகின்றன. இதற்கிடையே, மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் கொண்டு வரும் முறை அமலுக்கு வருகிறது. அதன்படி, முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா, உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் இந்த திட்டம் வருகிறது. இதன் பிறகு மற்ற பகுதிகளுக்கும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.
இந்நிலையில், தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.39 பைசாவும், டீசல் விலை ரூ. 1.04 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 31-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...