மாணவர் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தாமதமாகிஉள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில்,
உயர் கல்வித்துறை கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுவர். அண்ணா
பல்கலை குழுவினர், கவுன்சிலிங்கை நடத்துவர். ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 10க்கு
மேல், விண்ணப்ப பதிவு துவங்கி, மே மாதம் முடியும். கடந்த ஆண்டு, ஏப்.,
15ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது. இந்த ஆண்டு, ஏப்., 18ல்
துவங்க, மாணவர் சேர்க்கை கமிட்டி முடிவு செய்திருந்தது.
ஆனால், கவுன்சிலிங் அறிவிப்பு தள்ளிப்போடப்பட்டு உள்ளது. அதன் பின்னணியில், சில தனியார் கல்லுாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல இன்ஜி., கல்லுாரிகள், 'அட்வான்ஸ்' பெற்று, இடங்களை, 'புக்கிங்' செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, உயர்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா பல்கலை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவும், கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட்டால், தனியார் கல்லுாரிகளில் நிர்வாக இடங்கள் ஒதுக்கீடு நின்றுவிடும். முதல் தர கல்லுாரிகளுக்கு, எந்த சிக்கலும் இல்லை.
போதிய உள்கட்டமைப்பும், 'கேம்பஸ்' வேலைவாய்ப்பு வசதியும் இல்லாத கல்லுாரி களுக்கு, கவுன்சிலிங்கில், 'சீட்' நிரம்புவதே கடினம். எனவே, தற்போதே மாணவர்களிடம் பேசி, புக்கிங் செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியினர் நடத்தும் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் வசதிக்காக, கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் செய்யப்படுவதாக தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...