வணக்கம் நண்பர்களே, ஏமாறாதீர்கள் ! ஏமாறாதீர்கள் !! ஏமாறாதீர்கள்
இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு தேர்வு எழுத சென்றிருந்தேன் அங்கு பலர் பேசியதை கேட்டேன் அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற 7 இலட்சம் என்று பேசிக்கொண்டிருந்தனர் அவர்கள் யார் என்று தெரியவில்லை. இது குறித்து விசாரித்ததில் ஆசிரியர்
தகுதித் தேர்வை எழுதி முடித்த பின் அந்த தேர்வுகூட நுழைவுசீட்டு (நகல்) எடுத்து அதன் பின் 12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களை வெயிட்டேஜ் முறையில் எழுதி அதனுடன் முன் தொகையாக 5 இலட்சம் கொடுக்க வேண்டும் பிறகு வெற்றி பெற்ற பின் மீதி தொகையை கொடுக்க வேண்டும் என்று தெரிய வந்தது. அதில் சிலர் நாம் எழுதும் தேர்வில் தெரியாத விடைகளை பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டால் போதும் திருத்தும் இடத்தில் அவர்களே விடையை பூர்த்தி செய்துவிடுவார்கள் என்றும் சிலர் பேசியுள்ளனர். இவை முற்றிலும் தவறு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த முறை மிகவும் கவனமாக நடத்தபட்டுவருகிறது. தேர்வு எழுதும் போது 1 மணி நேரத்திற்கு ஒரு முறை யாரேனும் தவறு செய்கிறார்களா என்ற ரிப்போர்ட் கேட்கிறார்கள். முழுவதுமாக சோதணை பிறகு இறுதியாக நாம் எழுதிய விடைத்தாள்களை ஒரு கவரில் வைத்து மூடிவிடுகிறார்கள். இவ்வாறு மூடிய கவரை இடையில் எங்கும் கிழிக்க முடியாது எதாவது கிழிக்க முயன்றால் அந்த கவரில் OPEN என்று தானாக தோன்றிவிடும் எச்சரிக்கை செய்தி கேட்கும். இவ்வளவு பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த தேர்வு நடத்தபடுகிறது. நமது விடைத்தாள்கள் எந்த விதத்திலும் திறந்து எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிந்தால் தான் கணினி யே ஸ்கேன் செய்ய ஏற்றுக் கொள்ளும்படி மிகவும் பாதுகாப்பு அம்சம் இதில் உள்ளது. இது உண்மை இதில் எப்படி முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் எப்படி நீங்கள் பூர்த்தி செய்யாத விடைகளை மற்றவர்கள் பூர்த்தி செய்ய இயலும். எனவே இந்த தேர்வில் வெற்றி பெற யாரும் ரூபாய் எதுவும் கொடுக்க வேண்டாம் இப்போது நடந்த ஆய்வக உதவியாளர் உட்பட பல தேர்வு முடிவுகள் நேர்மையாக இருந்தது எல்லாம் நீதிமன்றங்களின் நேரடி பார்வையின் கீழ் வருகிறது.
உங்களிடம் யாரும் பணம் கேட்டால் புகார் தெரிவியுங்கள் அல்லது கொடுக்காதீர்கள் மற்றவர்களுக்கும் உண்மையை கூறுங்கள் மேலும் இதில் உள்ள உண்மை என்னவென்றால் இதற்கு முன் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலே வேலை என்று இருந்தது தற்போது தாள் 1 க்கு பணியிடம் 10 இருப்தே பெரிது இதில் 82 முதல் 150 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றாலும் வேலை என்பது கிடையாது இவை தகுதித் தேர்வு தான் 6000 பணியிடம் என்பது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லை இதை காரணம் காட்டி பலரிடம் ஆசை வார்த்தை கூறி உங்களை ஏமாற்றுகிறது பல கும்பல் இவை பல பயிற்சி மையங்கள் வாயிலாக நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. விழிப்புடன் இருங்கள் பணம் கொடுக்காதீர் ஆசிரியர் தகுதித் தேர்வு நேர்மையாக நடைபெறுகிறது.
இப்படிக்கு
உங்களில் ஒருவன்
Magilchi....
ReplyDeleteMagilchi....
ReplyDelete100% correct message
ReplyDeleteFake message. Rules and regulations are ok.politicians pugunthu vilayadiraga
ReplyDelete