உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேவையான ஊழியர்கள் பட்டியல் தயாரிக்க, மாநில
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. கடந்தாண்டு, அக்., 17, 18ல்
உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருந்தது. இடஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க.,
தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், எதிர்க்கட்சிகளுக்கு போதுமான அவகாசம்
வழங்கவில்லை எனக்கூறி, தேர்தலை ரத்து செய்தது.
தற்போது, ஜூலை 31க்குள் தேர்தலை நடத்துவதாக, நீதிமன்றத்தில், மாநில தேர்தல்
கமிஷன் தெரிவித்துள்ளது.இதையடுத்து, தேர்தலை நடத்த எவ்வளவு ஊழியர்கள் தேவை
என
கணக்கிட்டு, பட்டியல் தயாரிக்க, மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
அதிகபட்ச வாக்காளர்கள் இருந்தால், ஒரு சாவடிக்கு நான்கு ஊழியர்கள், குறைந்த
பட்ச வாக்காளர்கள் இருந்தால், மூன்று ஊழியர்கள், 10 சதவீத ரிசர்வ்
ஊழியர்கள் என்ற கணக்கீட்டில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே, தேவையான
ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி,
ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி, உள்ளாட்சி அமைப்புகளில் நடந்து
வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...