உத்தரபிரதேசத்தில் இனிவரும் நாட்களில் நாட்டிற்காகவும்,
சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு
தினங்களுக்கு விடுமுறை கிடையாது என முதல்வர் யோகி ஆதித்யநாத்
அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்பேத்கரின் 126 பிறந்தநாள் விழாவில் பேசிய யோகி, “ நாட்டின் தலைவர்களை நினைவுகூறும் முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படுவதால் குறிப்பிட்ட தலைவர்களை பற்றி மாணவர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது. ஏன் விடுமுறை விடுகிறார்கள் என்பதுகூட மாணவர்களுக்கு புரிவதில்லை. எனவே விடுமுறைக்கு பதிலாக குறிப்பிட்ட தலைவர்களின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல், வருடத்திற்கு குறைந்தது 220 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும் என விதிமுறை உள்ளது. இதுபோன்று அடிக்கடி விடுமுறை விடப்படுவதால் ஆண்டுக்கு 130 முதல் 140 நாட்கள் வரைதான் பள்ளிகள் செயல்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, இனிவரும் நாட்களில் தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு தினங்களுக்கு பள்ளிகளி விடுமுறை கிடையாது ” என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...