அரசு நிதி ஒதுக்காததால், மார்ச் மாத சம்பளம் இன்னும் கிடைக்காமல், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான
சம்பளம், மாத இறுதி நாளில், அவர்களது வங்கி கணக்கில், வரவு வைக்கப்படும்.
ஆனால், மார்ச் மாத சம்பளம் மட்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளின்
ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முடிந்ததும், பட்ஜெட்டில் அறிவித்தபடி, பள்ளி
கல்வித்துறை பணிகளுக்கு, நிதி ஒதுக்கப்படும். அதில், அரசு உதவி பெறும்
பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த
பணியானது, நிதித்துறையின் செலவின பிரிவில் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டுக்கான, சம்பள ஒதுக்கீடு உத்தரவை, அரசு இன்னும் வெளியிடவில்லை.
அதனால், மார்ச் சம்பளம், இன்னும் வழங்கப்படவில்லை. குழந்தைகளின் கல்விக்
கட்டணம், தனிநபர் மற்றும் வீட்டுக்கடன்களை கட்ட முடியவில்லை; நகைகளை அடகு
வைத்து, அன்றாட செலவுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு
அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...