Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரோபோடிக் சயின்ஸ்!!!

ரோபோக்களை வடிவமைப்பது மற்றும் பராமரிப்பது, ரோபோவின் புதிய பயன்பாடுகளை உருவாக்குவது மட்டுமில்லாமல், ரோபோ அமைப்புகள், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்யூனிகேஷன் மற்றும் கணினி உதவியுடன் ரோபோக்களை செயல்படுத்துவது
போன்றவற்றை இப்படிப்பில் விரிவாக படிக்கலாம்.
இத்துறையில் சாதிக்க...
இத்துறையில் சிறப்பான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள பொறியியல் நுட்பத்திறன்கள் அவசியம் தேவைப்படுகின்றன. அதனால், கம்ப்யூட்டர், ஐ.டி., மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் போன்ற ஏதேனும் ஒன்றில் பி.டெக்., பி.இ., படித்திருக்க வேண்டும்.
தொழிற்கல்வி கல்லூரிகளில் இத்துறை சார்ந்த பட்டயப் படிப்பும், பல பொறியியல் கல்லூரிகளில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பிரிவுகளில் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பாக, ரோபோடிக் படிப்பது சிறந்தது. மேலும், ஆராய்ச்சி படிப்பை தொடர்வதன் மூலமாக புதிய ரோபோ பயன்பாடுகளை உருவாக்கி, எதிர்காலத்தை வளமாக்கி கொள்ளும் வாய்ப்புகள் ஏராளம்.
பணி வாய்ப்புகள்
நவீன அறிவியல் துறையில், ரோபோடிக்ஸ் துறையானது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, இத்துறை சார்ந்த பணி வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றே கருதலாம். ரோபோ மானிபுலேட்டர், இயங்கும் ரோபோக்கள், நடக்கும் ரோபோக்கள், ஊனமுற்றோருக்கு உதவும் ரோபோக்கள், டெலிரோபோக்கள், மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் அமைப்புகள் என தேவைக்கேற்ப பணிபுரியும் பல வகை ரோபோக்களை உருவாக்கும் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
சம்பளம் எப்படி?
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரோபோடிக்ஸ் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. இத்துறையில் இணைபவர்கள் துவக்கத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம். ரோபோடிக்ஸ் படித்தவர்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் மிக நல்ல சம்பளத்தை வழங்குகின்றன. அதேசமயம், அதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்வது அவசியம்.
எங்கு படிக்கலாம்?
சென்னை, மும்பை, டெல்லி, கான்பூர், கவுகாத்தியிலுள்ள ஐ.ஐ.டி.,கள், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.,), ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம், பிர்லா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உள்ளிட்டவற்றில் இத்துறை படிப்புகளை படிக்கலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive