பெண்ணின் உடல் அழகை வர்ணித்த புத்தகத்தை ஆய்வு செய்ய, நிபுணர்கள் குழு அமைத்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான, உடற்கல்வியில் புத்தகம், 'நியூ சரஸ்வதி ஹவுஸ்' என்ற, நிறுவனம் மூலம் வெளியானது. அதில், பெண்களின் உடல் அழகு பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. 'மார்பு, இடுப்பு மற்றும் பின்பக்க அளவானது, 36 - 24 - 36 என்ற அங்குலங்களில் இருந்தால், பெண்களுக்கு அழகை தரும். அதனால் தான், உலக அழகி போட்டிகளில், இந்த அளவு பெண்கள் மட்டும் தேர்வாகின்றனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு
கிளம்பியது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பில், 'தனியார் பாட புத்தகங்களை பயன்படுத்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை' என, குறிப்பிடப்பட்டது. சி.பி.எஸ்.இ., அளித்த புகாரில், புதுடில்லி, பிரீத் விஹார் போலீசார், நியூ சரஸ்வதி ஹவுஸ் மற்றும் புத்தக ஆசிரியர், வி.கே.ஷர்மா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரம், சர்ச்சைக்குரிய புத்தகத்தை ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அளித்துள்ள முதற்கட்ட அறிக்கை: பெண்களின் உடல் அளவு, அழகு என, பாடத்திட்டத்தில் இல்லாத அம்சங்கள் புத்தகத்தில் உள்ளன; பாடத்திட்டத்தை தாண்டி ஆசிரியர்
எழுதியுள்ளார்.புத்தக ஆசிரியரும், பதிப்பாளரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை தொடர்பு கொண்டு, சட்ட விரோதமாக, பாடத்திட்டப்படி இல்லாத புத்தகத்தை விற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ.,யின்
கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்து விட்டனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...